செய்திகள்

திருமலை: சர்வர் பழுது: முடிகாணிக்கை செலுத்த பக்தர்கள் காத்திருப்பு

தினமணி

திருமலையில் கணினிகளுக்கான சர்வரில் திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாக கணினிகள் பழுதடைந்ததால் முடி காணிக்கை டோக்கன் பெற முடியாமல் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.
திருமலைக்கு வரும் பக்தர்களின் பெரும்பாலானவர்கள் தங்கள் முடியை ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்து வருகின்றனர். அதற்காக மலையில் சில முக்கிய பகுதிகளில் தேவஸ்தானம் முடி காணிக்கை செலுத்தும் மையத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு 24 மணிநேர சுழற்சி அடிப்படையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் அதற்கான மையத்தில் டோக்கன் பெற்று செல்ல வேண்டும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென்று முடிகாணிக்கை செலுத்தும் மையத்தில் உள்ள கணினிகள் அனைத்தும் சர்வர் கோளாறு காரணமாக பழுதடைந்தன. 
இதனால் டோக்கன் பெற முடியாமல் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பின் ஊழியர்கள் விரைந்து வந்து 2 மணிநேரத்திற்கும் மேல் போராடி கோளாறைச் சரிசெய்தனர். அதன்பிறகு வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 


62,092 பக்தர்கள் தரிசனம்
 ஏழுமலையானை வியாழக்கிழமை 62,092 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேசப் பெருமாளை வியாழக்கிழமை முழுவதும் 62,092 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 27,868 பக்தர்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். வெள்ளிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 15 காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி வழியாக 14,000 பேர், ஸ்ரீவாரிமெட்டு வழியாக 6,000 பேர்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். 
புகார் அளிக்க வாட்ஸ் ஆப்: திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற இலவசத் தொலைபேசி எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT