செய்திகள்

காணக்கிடைக்காத திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக புகைப்படங்கள் உங்களுக்காக! 

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துள்ளனர். 

கும்பாபிஷேக நீர் கலசங்களில் ஊற்றும் போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. 12 மணி வரை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மூலவர் வெங்கடாசலபதிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. 

மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருமலை திருப்பதிக்கு பல டன் கணக்கில் மலர்கள் வந்திறங்கியது. திருமலை கோயில் முழுவதும் மின்விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் திருப்பதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT