செய்திகள்

சோலை மலையில் தை பூசத் திருவிழா கொடியேற்றம்

DIN

அழகர்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் திருக்கோயிலில் தை பூசத்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு காலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப் பெருமான், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், காலை 9.45 மணியளவில் கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை அன்ன வாகனத்திலும், புதன்கிழமை காமதேனு வாகனத்திலும், வியாழக்கிழமை ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் சுவாமி எழுந்தருள்கிறார். 31-ஆம் தேதி தைப் பூசத்தையொட்டி சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
தை பூசம் வரை தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT