செய்திகள்

சுவாமிமலையில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் அணையா விளக்கு!

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு சுவாமிமலையில் 50 லிட்டர் கொள்ளளவு...

DIN


மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு சுவாமிமலையில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட வெண்கலத்தால்ஆன அணையா விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கும்பாபிஷேகத்தின்போது, கோயிலின் எதிரே அணையா விளக்கு அமைக்க, அந்நாட்டைச் சேர்ந்த பக்தர் சாமுவேல் சண்முகநாதன் என்பவர் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள ஜெயம் சிற்பக் கூடத்தில் அணையா விளக்கு வடிவமைத்து தருமாறு கோரினார்.

அதன்படி, சிற்பக் கூட ஸ்தபதிகள் 3 அடி உயரத்தில் 160 கிலோ எடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் வெண்கலத்தால் ஆன அணையா விளக்கை வடிவமைத்துள்ளனர். இந்த விளக்கு ஓரிரு நாள்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT