செய்திகள்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் வரவேற்பு 

DIN

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்து சிவபெருமான் வரவேற்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா கடந்த 13-ம் தேதி திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 

ஜூன் 14-ம் தேதி காலையில் சுவாமிக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதியுலா வருதலும், அன்றிரவு மின் அலங்காரத்துடன் அழகிய முத்து திருஓடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருஞானசம்பந்தர் திருமடாலயத்திலிருந்து திருமேற்றழிகை, கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அங்கிருந்து திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு முத்துப்பல்லக்கில் அடியார்கள் புடைசூழ வந்து தரிசித்தலும் நடைபெற்றது.

அங்கிருந்து தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப்பந்தலில் திருஞான சம்பந்தர் காட்சியளித்து, தேனுபுரீஸ்வரரை வழிபடல் காட்சியும், இன்றிரவு ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், சுவாமியுடன் திருஞானசம்பந்தர் முத்துப்பந்தலில் திருவீதி வலம் வருதலும் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT