செய்திகள்

88,353 பக்தர்கள் வழிபாடு

DIN

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 88,353 பக்தர்கள் வழிபட்டனர். மேலும் 24,532 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 
திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாள்களை ஒட்டி திருமலையில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் திங்கள்கிழமையும் தொடர்ந்து நீடித்தது. அதன்படி திங்கள்கிழமை காலை நேர ஒதுக்கீட்டு முறை பக்தர்கள் 7 மணிநேரமும், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 24 மணிநேரத்திற்கு பின்பும் தரிசனம் அளிக்கப்படுகிறது.
தர்ம தரிசன பக்தர்கள் 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து 2 கி.மீட்டர் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். 
நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் 5 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்லாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT