செய்திகள்

மகா காளேஸ்வரர் கோயில் முன்பாக பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர் (விடியோ)

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காளேஸ்வர் கோயில் முன்பாக பெண்கள் மீது இளைஞர்..

தினமணி

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காளேஸ்வர் கோயில் முன்பாக பெண்கள் மீது இளைஞர் நடத்திய கொடூரத் தாக்குதல் அங்குள்ள பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மகா காளேஸ்வர் கோயிலில் நேற்றிரவு கோயில் வணிகர்கள் தொழில் போட்டி காரணமாக பொது இடத்தில் சண்டையிடும் இரு பெண்களை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. 

உஜ்ஜைனியில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகத் திகழ்கிறது மகா காளேஸ்வர் திருக்கோயில். இக்கோயிலில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கோயிலுக்கு வெளியே கடை வைத்துள்ள பெண்கள் இரண்டு பேர் தொழில்போட்டி காரணமாக ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பின்னர் இரண்டு பெண்களுக்கு மத்தியில் ஒரு இளைஞர் புகுந்து பெண்களை சரமாரியாக அடித்து உதைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர், அங்கிருந்த நீளமான பைப்பைக் கொண்டு 2 பெண்களையும் சரமாரியாக கொடூரமாகத் தாக்கினார். இதில் நிலைகுலைந்த அந்தப் பெண் தரையில் விழுவது போல் வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT