செய்திகள்

ஜாதகப்படி உங்களுக்கு எந்த திசை நடக்கிறது? அது நல்லதா? கெட்டதா?

நமது அன்றாட வாழ்வில் அவரவர் மதத்திற்கேற்ப இறை வழிபாட்டுக்கென தனி முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

தினமணி

நமது அன்றாட வாழ்வில் அவரவர் மதத்திற்கேற்ப இறை வழிபாட்டுக்கென தனி முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இறை வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால்  பல நற்பலன்களை நாம் அடையலாம். 

ஒரு வீட்டில் நான்கு பேர் என்றால் 4 பேருக்கும் வெவ்வேறு திசையும், தசாபுத்தியும் நடக்கும். ஜாதகத்துக்கு ஏற்ப திசையும், தசாபுத்தியும் மாறுபடும். அந்தவகையில், நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது என்பதை ஜாதகப்படி தெரிந்துகொண்டு அதற்கேற்ப தெய்வதை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்ந்து வாழ்வில் முன்னேறலாம். 

எந்த திசை நடப்பதாக இருந்தாலும், அவரவர் ஜாதகப்படி நன்மை, தீமை கலந்தே இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். 

• சூரிய திசை -  தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் பிணிகள் நீங்கும்.

• சந்திர திசை - லோக நாயகியான அம்பிகையை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

• செவ்வாய் திசை - முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் அடையலாம். 

• புதன் திசை - மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து வழிபட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

• வியாழன் திசை - தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வாழ்வில் பல நல்ல திருப்பங்களை காணலாம். 

• சுக்ர திசை - சக்தி, அபிராமி வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

• சனி திசை - அனுமனை வழிபடுவதால் தடைகள் அனைத்தும் அகலும்.

• ராகு திசை - துர்க்கையை வழிபட மனகஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

• கேது திசை - விநாயக பெருமானை வழிபட்டு வர தடைகள் அகலும். 

• இதைத் தவிர செவ்வாய் திசை, சனி புத்தி நடப்பவர்களும், வியாழ திசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் மற்றும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடைபெறும் காலத்தில் பைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாட்டினை செய்து வந்தால் இன்னல்கள் நீங்கும். 

நம்பிக்கையுடன் இறை வழிபாடு செய்து வந்தால் தசா புத்திகளால் ஏற்படும் தடைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT