செய்திகள்

இன்று அசோகஷ்டமி: சீதா தேவியை பூஜிக்க வேண்டிய நாள்! 

அசோகஷ்டமி சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாத தன்மை, மங்கலம், நன்மை என்று அழைக்கப்படுகிறது. 

தினமணி

அசோகஷ்டமி சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாத தன்மை, மங்கலம், நன்மை என்று அழைக்கப்படுகிறது. 

சீதை அசோகவனத்தில் இருக்கும் போது இராவணனால் சிறை வைக்கப்பட்ட பத்து மாத காலத்தில் அங்கிருந்த மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில் சீதைக்கு பக்கத்தில் இருந்த ஒரு மரமே அசோக மரமாகும். 

அந்த அசோக மரமானது ராமரைப் பிரிந்து இருந்த காலத்தில் சீதைக்கு ஆறுதல் அளித்து சோகத்தை போக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த மரத்தைத் தான் இன்று உபாசிக்க வேண்டும். அசோக மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்து ராமருக்கான ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
 

சீதைக்கு உகந்தது மருதாணி. அந்த இலைகளை மாலையாக கட்டி சீதாதேவிக்கு போடலாம். மருதாணியை நன்கு அரைத்து அம்பாளுக்கு அலங்காரம் பண்ணலாம். கையில் மருதாணி வைத்துக்கொண்டு அம்பாளை உபாசிக்கலாம். இன்றைய தினம் மருதாணியை வாங்கி தானம் செய்தால் நம் வீட்டில் இருக்கும் சோகங்கள் அனைத்தும் நீங்கி, மனம் தெளிவடையும். நிம்மதி கிடைக்கும் என்ற சூட்சமங்களை விரத சூடாமணியில் விளக்கமாகத் தெரிவித்துள்ளது. 

எனவே, அசோகஷ்டமியான இன்று அசோக மரத்தைப் பூஜித்து, மருதாணி இலை மற்றும் மருதாணி பூக்களை சீதா தேவிக்கு அர்ச்சனை செய்து வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோமாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT