செய்திகள்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிச.12-ல் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

DIN

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் முயற்றியால் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. 

9-ம் தேதி பரிவார மர்த்திகளுக்கும், 12-ம் தேதி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பரிவார மூர்த்தி சன்னதிகளில் ஏற்கனவே பாலாலயம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 7-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக யாக குண்டங்கள் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. முன்னதாக 6-ம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரி படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

யாகசாலை பூஜைகள் நடைபெறும் நாட்களில் தினமும் கோயில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT