செய்திகள்

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் அக்.4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா 

DIN

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் அக்.4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. 

தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் இத்தல இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

இந்த கோயிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். 

அவ்வளவு சிறப்பு வாய்ந்த குருப்பெயர்ச்சி திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 10.05 மணிக்கு துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 10-ம் தேதி லட்சார்ச்சனையும், 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT