செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கீரிடம், மாலைகள் நன்கொடை (விடியோ)

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக உலர் பழங்களைக் கொண்ட மாலைகள், கிரீடங்களை திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஒன்பது நாள் நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த செப்.13-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, காலை - மாலை என தினமும் ஒரு வாகனத்தில் தயாருடன் மலையப்பசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையானுக்கு தினமும் பிற்பகலில்  சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்று நடைபெறும் திருமஞ்சனத்தில் மலையப்பசுவாமியை அலங்கரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் உலர் பழங்களை கொண்ட கிரீடம் மற்றும் மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் ரூ.5 லட்சம் செலவில் பிரத்யேகமாக தயார் செய்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT