செய்திகள்

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் கோலாகலம்

தினமணி

திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இத்திருக்கோயில் பங்குனித் திருவிழாவுக்கான பெரிய கொடியேற்றம் மார்ச் 14-ம் தேதியும், எட்டுத்திக்கு கொடியேற்றம் 31-ம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் வாகனங்களில் புறப்பாடாகி வீதியுலா வருதல் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமையான இன்று காலை 6.50 மணிக்கு நடைபெற்றது. முதலில் சுவாமி தேர், தொடர்ந்து அம்மன் தேர் வடம்பிடிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரரின் சிறிய தேர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT