செய்திகள்

சித்திரை பிரம்மோற்சவம்: திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் கருட சேவை

DIN

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற கருட சேவை நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 11-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் உலா வருகிறார்.
 விழாவின் 3-ஆவது நாளான சனிக்கிழமை (ஏப். 13) கருட சேவையும், கோபுர தரிசன நிகழ்வும் நடைபெற்றன. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு உற்சவர் வீரராகவப் பெருமாள், பலவகை மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் காட்சியளித்தார்.
 அதையடுத்து, காலை 5.30 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT