செய்திகள்

40-வது நாளில் ஆரஞ்சு நிறப் பட்டாடையில் காட்சிதரும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவின் 40-ம் நாளான இன்று இளம் ஆரஞ்சு பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

தினமணி

அத்திவரதர் பெருவிழாவின் 40-ம் நாளான இன்று இளம் ஆரஞ்சு பட்டாடையில்  நீல நிற ஜரிகை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31 நாட்கள் சயன கோலத்திலும், 9 நாட்களாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்கப் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த 39 நாட்களில் 73 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

அத்திகிரி அருளாளனை இன்னும் 7 நாட்களே தரிசிக்கமுடியும் என்பதால், பக்தர்கள் நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதருக்கு அகமவிதிப்படி பூஜைகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா்லியாறு பகுதியில் உலவும் காட்டு யானைகள்

உதகையில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை

காவலா் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு

வேளாண் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சாலை அமைக்க பூமிபூஜை

SCROLL FOR NEXT