செய்திகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாலாலயம் நடைபெற்றது

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி


உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதையடுத்து கடந்த 29ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை தொடங்கியது. 

தொடர்ந்து 30ம் தேதி மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகமும், மாலை, மருத்சங்கரஹணம்,அங்குரார்பணம்,ரஷ்கபந்தனுடன் முதல் கால யாகசாலை நடைபெற்றது. அதன் பிறகு மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் திரையிட்ட மறைக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலையும் நடைபெற்றது.

இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெருவுடையார் சன்னதியில், செப்பு திருமேணியாலான பெருவுடையார், பெரியநாயகி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை காண்பிக்கப்பட்டன. மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹனம் செய்யப்பட்ட படத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். 

கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை பிரதோஷம், மகரசங்கராந்தி போன்ற விழாக்கள் நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தொவிக்கப்பட்டுள்ளன. 

தகவல் : S.K.வீடியோ  7094475552

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT