முகப்பு
செய்திகள்

திருமலையில் மார்ச் மாத உற்சவங்கள்

திருமலையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள உற்சவங்களின் விவரத்தை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 2:36 am IST
பகிர்:


திருமலையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள உற்சவங்களின் விவரத்தை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஓராண்டில் 450 உற்சவங்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். அதனால் திருமலை நித்ய கல்யாணமும், பச்சைத் தோரணமுமாக எப்போதும் விளங்கி வருகிறது. உற்சவங்களை தேவஸ்தானம் வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்களாகப் பிரித்து நடத்தி வருகிறது. ஏழுமலையானுக்கு மட்டுமின்றி ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவதார உற்சவம் உள்ளிட்டவையும் நடத்தப்படுகின்றன. அதன்படி வரும் மார்ச் மாதம் திருமலையில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

மார்ச் 2:     மதத்ரய ஏகாதசி
மார்ச் 4:     மகா சிவராத்திரி
மார்ச் 14 :     திருகச்சி நம்பி சாத்துமுறை
மார்ச் 16-20 :     ஏழுமலையான் வருடாந்திர தெப்போற்சவம்
மார்ச் 17:     சர்வ ஏகாதசி
மார்ச் 20:     ஹோலி, தும்புருதீர்த்த முக்கோட்டி
மார்ச் 21:     ஸ்ரீசாலநாச்சியார் சாத்துமுறை, ஸ்ரீலட்சுமி ஜெயந்தி
மார்ச் 31:     ஸ்மார்த்த ஏகாதசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.