செய்திகள்

அத்தி வரதரைக் காண ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

தினமணி


அத்திவரதர் பெருவிழாவையொட்டி சகஸ்ரநாம அர்ச்சனைக்கான ஆன்லைன் முன்பதிவு செவ்வாய்க்கிழமையான நேற்று தொடங்கியது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அத்திவரதருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி, வரும் 4-ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனம் வழங்கப்படுவதோடு, சகஸ்ரநாம அர்ச்சனையும் செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. 

நாளொன்றுக்கு காலையில் 250 பேர், மாலையில் 250 பேர் வீதம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 11 முதல் 12 மணி வரையும், மாலை 5 முதல் 6 மணி வரையும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

சகஸ்ரநாம தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாக முக்கியஸ்தர்கள் செல்லும் தனிவரிசையில் அனுமதிக்கப்படுவர். மேலும், இதற்கான விதிமுறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

www.tnhrce.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT