செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் பார்வேட்டு உற்சவம்

DIN


சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் பார்வேட்டு உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள இக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் முடிந்து 48 நாள் மண்டல பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயிலில் கடந்த 3 தினங்களாக சாட்சாத்கார வைபவ உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர்கள் பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் மாடவீதியில் வலம் வந்தனர்.
சீனிவாசமங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பாதை வழியாகவே பெருமாள் திருமலைக்குச் சென்று வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
 முனிவர்களும், ரிஷிகளும் இந்த வழியாகவே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே இப்பாதை வழியாக பார்வேட்டு எனப்படும் வேட்டையாடும் உற்சவத்தை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.
இதற்காக கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலிலிருந்து உற்சவர்கள் ஸ்ரீவாரிமெட்டு பாதையில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆராதனை செய்யப்பட்டு, நைவேத்தியம் படைக்கப்பட்டது.
அதன்பின் உற்சவமூர்த்திகள் கையில் வாள், வில், கேடயம் உள்ளிட்டவற்றை தரித்து வனவிலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அர்ச்சகர்கள், அதிகாரிகள் இணைந்து நடத்தினர். இதைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT