செய்திகள்

திருத்தணி முருகனுக்கு திருப்பதி தேவஸ்தான பட்டு வஸ்திரம்

திருத்தணி முருகனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.

தினமணி


திருத்தணி முருகனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை அன்று அறுபடை வீட்டில் 5-ஆம் படை வீடாகக் கருதப்படும் திருத்தணி தணிகேசனுக்கு (முருகனுக்கு) பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை ஆடி கிருத்திகையை முன்னிட்டு தேவஸ்தானம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தது.  தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்டோர் தலையில் பட்டு வஸ்திரம் சுமந்து சென்றனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்,  தக்கார் ஜெயசங்கர், கோயில் பொறுப்பு செயல் அதிகாரி மற்றும் இணை ஆணையாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பட்டு வஸ்திரத்தை மரியாதை அளித்து அதை பெற்றுக் கொண்டனர். பின் முருகனை தரிசித்து திரும்பிய தேவஸ்தான செயல் அதிகாரி,  2006-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானம் ஆடிகிருத்திகை அன்று திருத்தணி முருகனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வருகிறது. எனக்கு 4 ஆண்டுகளாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு க்கிடைத்துள்ளது. நானும் தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டியும் இணைந்து முருகனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தோம், என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT