செய்திகள்

திருப்பதியில் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்: 26 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யப் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக  திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கோடை விடுமுறை முடியும் நிலையில் திருப்பதி திருமலையில் கடந்த 2 நாட்களாகப் பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளதால், இலவச  தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 26 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காத்திருப்பு அறையில் நிற்கும் பக்தர்களுக்குத் தேவஸ்தானம் சார்ப்பில் நீர் மோர், உணவுகள் வழங்கப்பட்டது. அதேபோல்,  ஆங்காங்கே நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர். இதனால், உண்டியல் வருமானம் 2 கோடியே 56 லட்சம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள்  தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT