செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா: மார்ச் 11-ல் உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி மார்ச் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி மார்ச் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 11-ம் தேதி ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு அந்த தேதியில் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறுவதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தத் தேர்வு அன்றைய தேதியிலேயே வழக்கம்போல நடைபெறும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 11-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT