செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி கிருத்திகை விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

DIN


மாசிக் கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாசி கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பச்சை மாணிக்க மரகதக்கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்களை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். மேலும் சஷ்டி மற்றும் கிருத்திகை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் பொதுவழியில், 4 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT