செய்திகள்

பச்சூர் சென்றாய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோயிலில் 11 நாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

DIN


நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோயிலில் 11 நாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பச்சூர் பகுதியில் மலை உச்சியில் மிகவும் பழைமை வாய்ந்த சென்றாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு  நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கிராம மக்களும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் வந்து சென்றாய சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயிலில் 90-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதில் நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை (11 நாள்கள்) பிரம்மோற்சவம்  நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கிராம மக்கள் மற்றும் சென்றாயசுவாமி கோயிலின் அனைத்து உற்சவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT