செய்திகள்

மழை பெய்ய வேண்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

DIN


நகராட்சியில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னை தீர்வதற்கு மழை பெய்ய வேண்டும் என வேண்டி 100 பெண்கள் ஏரியில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி நகராட்சியில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் குடிநீர் வழங்கும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் ஏரிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், நகராட்சியில் கடும் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. 
குடிநீர்ப் பிரச்னை தீரவும், மழை பெய்யவும் வேண்டி திருத்தணி சந்து தெரு, பெரிய தெரு, மேட்டுத் தெரு மற்றும் ஆறுமுக சுவாமி கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்கள் பழைய தர்மராஜா கோயில் அருகில் உள்ள ஏரியில் வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அப்போது, மழை பெய்ய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வருண பகவானை வேண்டினர். இந்த வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT