செய்திகள்

உயர்ந்த மனிதன் யார்?

DIN

 
பட்டினத்தார் பாடல்களில் உலக இயற்கையாய், உலக மக்களின் இயல்பை, அவர்கள் உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்கள் பல உள்ளன.
 
"அறந்தான் இயற்றும் அவனிலுங்
 கோடி அதிகம் இல்லம்
துறந்தான்; அவனின் சதகோடி
 உள்ளத் துறவுடையோன்;
மறம் தான் அறக்கற்று அறிவோடு
 இருந்துஇரு வாதனையற்று;
இருந்தான் பெருமையை என்சொல்லு
 வேன்? கச்சி ஏகம்பனே!"

பல அறங்களைத் தவறாமல் செய்யும் இல்லற வாழ்க்கை உடையவன் சிறந்தவன், அவனை விடவும் இல்லறம் துறந்து துறவறம் கொண்டவன் உயர்ந்தவன். அவன் இல்லறத்தானையும் விட உயர்ந்தவன்.
 
இல்லற இன்பத்தைத் துறந்து துறவு கொண்டவனையும் விட உண்மையான உள்ளத்துறவு கொண்டவன் உயர்ந்தவன். மனதால் எந்த எண்ணமும் எண்ணாமல் தன்னலம் துறந்து வாழ்பவன் உயர்ந்தவன்.
 
சொல்லமுடியாதளவு பெருமையுடையவன் யாரென்றால் சொல்கிறேன் கேளுங்கள்.. குற்றமற்ற கல்விகற்று, அறநெறியிலே நின்று நல்வினை தீவினைப் பயன்களைப் பற்றி எண்ணாமல் தன் கடமையைச் செய்து வாழ்பவனே எல்லோரிலும் அளவிடமுடியாத உயர்ந்தவனாவான் என்கிறார் பட்டினத்தார்.
 
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
 
"ஆன்ம ஞானத்தை அடையச் சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
 
- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT