செய்திகள்

பத்தாம் பாவமும் படிப்பும்!

தாய் தந்தையருக்குக் குழந்தை நன்றாகப் படித்து பெரிய இடத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் படிக்க..

DIN

பெற்றோர்களுக்கான சிறப்புப் பகுதி
  
தாய் தந்தையருக்குக் குழந்தை நன்றாகப் படித்து பெரிய இடத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் படிக்க வைக்கிறார்கள். பெற்றோரின் முக்கிய குழப்பம்  குழந்தைகளை எந்த படிப்பு படிக்க வைக்கலாம் என்று கேள்விக் கணைகளுடன் எங்களிடம் வருகின்றனர். நாங்கள் அது கணித்துக் கூறினாலும் அந்த படிப்பு துறை விட்டுப் பெற்றோருக்கு எது முதன்மை படிப்பு என்று நினைக்கிறார்களோ அதையே படிக்க வைக்கிறார்கள். தாயானவள் குழந்தையின் திறமை மற்றும் புத்திக்கூர்மை கொண்டு  சரியான பாதை நியமிக்கலாம். முதலில் நாம் ஒவ்வொரு  குழந்தைகளும் மனப்பாடம் செய்யும் திறமை மாறுபடும், சில குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வமும்  படிப்பில் குறைந்த ஆர்வமும் இருக்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம். 

கல்விக்கான பாவங்கள்

  • ஜாதகத்தின் ஆரம்பக் கல்வி இரண்டாம் பாவம் ஆகும். இந்த பாவம் 90% இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு வலுவாகத்தான் உள்ளது.
  • அடுத்தடுத்த பாவமான 4,5,9   வலிமை பெற்று வேலை செய்ய வேண்டும். நான்காம் பாவம் என்பது பட்டப்படிப்பு, ஒன்பதாம் பாவம் உயர்கல்வி முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு. ஐந்தாம் பாவம் வலிமை  பெற்றால் சிறந்த கல்விமானாகவும் சுயமாக சிந்திக்கும் ஆர்வம் கொண்டவனாகவும் இருப்பான்.

    புலிபாணி தன் பாடலில் - நான்காவது, ஐந்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றி அழகாக விளக்குகிறார்.

    வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்

    மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்

    பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்

    வித்தை புத்திபுத்திரர் செல்வமே

நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, கல்வி, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம். பத்தில் பாதியான  ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென  எழுதலாம்.  

பத்தாம் பாவம் - படிப்பு பாவத்தின் அடித்தளம் (foundation)

  • கர்மகாரகன் பாவமான பத்தாம் பாவம் கொண்டுதான் மேல் சொன்ன படிப்பு பாவமான 4, 5, 9 வேலை செய்யவேண்டும். அதையே நம் புலிப்பாணி பத்தாம் பாவத்தைப்  பெருமையாகக் கூறுகிறார்.

    ‘செய்யப்பா இன்னமொரு சேதி கேளு

    செயலாக நிதி கருமனிருவர் கூடி

    கையப்பா கண்ணுற்று நோக்கினாலும்

    கனமுள்ளோரிருவருமே மாறினாலும்

    அய்யப்பா அகம் பொருளும் நிலமுஞ் செம்பொன்

    அப்பனே கிட்டுமடா ஜென்மனுக்கு

    உய்யப்பா போகருட கடாட்சத்தாலே

    உத்தமனே புலிப்பாணி உரைத்தோம் நாமே.’’

சீர் மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! நிதியை குறிப்பிடும் இரண்டிற்குடையவனும், ஜீவனஸ்தானாதியும் பத்துக்குடையவனும் கூடினாலும்,  பார்த்தாலும், பரிவர்த்தனை அடைந்தாலும் அந்த ஜாதகருக்கு பொன், பொருள், நிலம், குபேர சம்பத்து கிட்டும் என்பதாகும். 

  • முதலில் தொழிலின் பாவம் கொண்டு படிப்பை நிர்ணயிக்க வேண்டும். இன்றும் பல பேர் படிப்புக்கும் உத்தியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை. அதிகம் படித்தவர்களும் வாகன  ஓட்டுநர், ஹோட்டல் மற்றும் பல வெவ்வேறு துறைகளில் சம்பந்தம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக எனக்குப் பிடித்த பாடம் கணக்கு ஆனால் நான் அறிவியல் ஆராய்ச்சி துறையில் உதவியாளராக வேலை செய்தேன். அதையும் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வேலையில் ஈடுபட்டுள்ளேன். இன்று கணக்கும் அறிவியலும் சேர்ந்து உதவியாக உள்ளது. ஆனால் இது ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது.
     
  • நாங்களும் ஜாதக ரீதியா பார்க்கும்பொழுது ஜாதகர் எந்த துறையில் அதிக வருமானம், மற்றும் திருப்தி உள்ளது என்று 1, 6, 10, 11 பாவங்கள் கொண்டு தீர்மானிப்போம். அதைக்கொண்டுதான் அவர்கள் இடைநிலை ஆசிரியர், விரிவுரையாளர், எழுத்தாளர், விவசாயத்துறை, பேச்சாளர், ஜோதிடர், பொறியாளர், நீதித்துறை, மருத்துவத்துறை, மற்ற அறிவியல் சார்ந்த படிப்பு, ஆடிட்டர், கணினித் துறை, தொழில்நுட்ப துறை, பத்திரிக்கைத் துறை, பாடகர், நாட்டிய துறை, கணக்காய்வு அலுவலர், எழுத்தர், நிர்வாகி என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.
     
  • ஜாதகப்படி ஸ்திர ராசிக்காரர்கள் உட்கார்ந்தபடி வேலை செய்வார். சர ராசிக்காரர்கள் அதிக ஓட்டம்கூடிய சதா சஞ்சார நிலையில் வேலை செய்வார். உபய ராசிக்காரர்கள்  ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபடுவார்கள்.

படிப்பையும் தொழிலையும் உயர்த்தும் காரக கிரகங்கள்

  • ஜாதகத்தில் புதன், சனி எல்லா கிரகங்களுடன் சம்பந்தப்பட வேண்டும். அப்பொழுது தான் தொழில் துறையில் மேன்மை அடைவர். மற்ற கிரகங்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளது.
     
  • புதன் கிரகம் ஆட்சி, உச்சம், நட்பு நிலைமையில் இருக்கிறாரா, சுபக் கிரக பார்வை உள்ளதா, லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் புதன் நல்ல நிலையில்  உள்ளாரா என்றெல்லாம் பார்க்கவேண்டும். அஷ்டவர்க்கத்தில் புதன் பரல்கள் அதிகமாக இருக்கவேண்டும். புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி,  நினைவாற்றல் நன்றாக இருக்கும். புதன் ராசி, அம்சம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதனுடன் ராகு சேர்ந்தால் புத்தி ஞானம் அதிக வலிமை பெரும். ஆனால்  அது நல்ல சக்தியா கேட்ட சக்தியை என்று பாவரீதியாக பார்க்கவேண்டும். 
     
  • தொழிலையும் கர்மாவையும் குறிப்பவன் நம் சனிபகவான். அவருடன் உதவியுடன் நம் தொழில் அடிமை தொழில் செய்பவரா அல்லது சொந்த தொழில் செய்பவரா  அல்லது குடும்ப தொழில் செய்பவரா என்று தீர்மானிக்க முடியும். 
     
  • புகழுடன் வேலையில் உயர சூரிய பகவான் உதவி தேவைப்படும். சூரியனும் மற்றும் செவ்வாய் மருத்துவ படிப்புக்கு, அரசியல் சார்பான துறைக்கு உதவுவர். 
     
  • அரிசி வியாபாரி, மனோதத்துவ நிபுணர், தண்ணீர் சார்ந்த தொழிலைச் செய்பவர்கள் சந்திரன் பலம் பெற்றவர்கள். படிப்பதை மனதில் நிறுத்திக்கொள்ள சந்திரன்  உதவவேண்டும்.
     
  • செவ்வாய் பலம் பெற்றால் விஞ்ஞானி, மின்சாரத்துறை, செங்கல் வியாபாரி, மனை விற்பனையாளர் என்று சொல்லிக்கொண்டு போகலாம்.
     
  • குருவின் உதவியுடன் ஜோதிடம், கோவில் அர்ச்சகர், நீதித்துறை, வேலை செய்யும் நகை வியாபாரிகளாக, ஆசாரிகளாக பணிபுரிய குரு, சுக்கிரன் உதவி ஜாதகருக்கு  தேவை.
     
  • புதன், சந்திரன் மற்றும் சுக்கிரன் இசைத் துறையில் உயர்வர். 
     
  • சுக்கிரன் இசை, கட்டிட துறை, சினிமா துறை மற்றும் ஒப்பனையாளர் துறைக்கு உதவியானவர்.
     
  • ராகு ஒரு புதிய விரும்பி அதனால் கணினித் துறை, புதிய கண்டுபிடிப்பு என்று ராகுவின் வேலை. யோகா ஆசிரியர் மற்றும் மருத்துவம், ஆராய்ச்சி படிப்புக்கு கேதுவின்  துணை தேவை. 

ஒவ்வொரு கிரகங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்பொழுது தொழிலின் செயல்பாடு மாறுபடும். இது தவிர அவர்கள் வெளிநாட்டுக்குப் போவது, அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் வேலை செய்வது பற்றிய விவரங்கள் தனியாகக் கட்டுரையில் சொல்லப்படும்.

திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தாமதம் 

படிப்புக்கு ஏற்ற தொழில் அமையாததால் சிலர் வேலை செய்துகொண்டே வெவ்வேறு படிப்புகள் அவர்கள் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப படித்துக்கொண்டே இருக்கின்றனர்.  இதனால், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்று 35 வயதுக்கு மேல் வயதாகிச் செயல்படுகின்றனர். ஜாதகர் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். 

பெற்றோருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தொழிலுக்கு ஏற்ப படிப்பை நியமித்துக் கொள்ளுங்கள். இதில் நிறைய விரயங்கள் வீணாகாது. இன்றைய காலகட்டத்துக்கு அனுபவ  படிப்பு அதிகம் தேவைப்படுகிறது.

- ஜோதிட சிரோன்மணி தேவி

சென்னை. தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT