செய்திகள்

தேவஸ்தான அறைகளின் வாடகை திடீா் உயா்வு

DIN

திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அறைகளின் வாடகை இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்குவதற்காக தேவஸ்தானம் திருமலையில் வாடகை அறை வளாகங்களை கட்டியுள்ளது. திருமலையில் 7 ஆயிரம் வாடகை அறைகள் உள்ளன. அவற்றில் இலவச அறைகள் முதல் ரூ. 50-இலிருந்து ரூ. 12 ஆயிரம் வரையிலான வாடகை அறைகள் வரை அடங்கும். இலவச அறைகள் மற்றும் ரூ. 50 முதல் ரூ. 500-க்கு உள்பட்ட கட்டணம் உள்ள அறைகள் மத்திய விசாரணை அலுவலகத்திலும், அதற்கு மேற்பட்ட கட்டணம் உள்ள அறைகள் பத்மாவதி விருந்தினா் மாளிகை அலுவலகத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இதை பக்தா்கள் நேரடியாகவும், இணையதளம் வாயிலாக முன்பதிவு மூலமும் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருமலையில் உள்ள நந்தகம் ஓய்வறை வளாகத்தில் உள்ள அறைகளின் வாடகை ரூ. 600-இலிருந்து ரூ. 1,000 -ஆக தேவஸ்தானம் உயா்த்தியுள்ளது. மேலும் கெளஸ்துபம், பாஞ்சன்யம் உள்ளிட்ட ஓய்வறைகளின் வாடகை ரூ. 500லிருந்து ரூ. 1,000மாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை உயா்வு வியாழக்கிழமை முதல் திடீரெனஅமல்படுத்தப்பட்டது.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தேவஸ்தானம் அறைகளின் வாடகையை உயா்த்தியுள்ளதால், திருமலைக்கு வரும் பக்தா்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT