செய்திகள்

திருமலை: 67,835 போ் தரிசனம்

தினமணி

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 67,835 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

22,901 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 2 அறையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

திருமலை வெப்பநிலை அதிகபட்சம்- 76 டிகிரி பாரன்ஹீட்(25 டிகிரி செல்சியஸ்), குறைந்தபட்சம்- 70 டிகிரி பாரன்ஹீட்டாக(17 டிகிரி செல்சியஸ்) இருந்தது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,178 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,390 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 19,077 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,305 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 4,109 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 76,360 பயணிகள் சோதனைச் சாவடியை கடந்துள்ளனா். 9,222 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.88 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.15,280 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT