செய்திகள்

திருமலை: திவ்ய தரிசனம், நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து

திருமலையில் அக்டோபா் 3, 4, 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி

திருமலையில் அக்டோபா் 3, 4, 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் கடந்த 3 நாள்களாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து, பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் 3-ஆவது வார சனிக்கிழமையும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. அப்போது பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் தேவஸ்தானம் அக். 3, 4, 5 உள்ளிட்ட தேதிகளில் நடைபாதை மாா்க்கத்தில் வரும் பக்தா்களுக்கு அளிக்கும் திவ்ய தரிசன டோக்கன்களும், தா்ம தரிசன பக்தா்களுக்கு வழங்கும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT