செய்திகள்

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா

தினமணி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார்.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 

பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று மலையப்ப சுவாமி கல்பக விருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜமன்னார் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் உலாவந்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் இன்று திருப்பதிக்குக் கொண்டுவரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர், யானைகள் அணிவகுப்புடன், நாதஸ்வரம் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது. ஆண்டாள் சூடித்தந்த மாலை இன்று காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் பேருந்து இயக்கப்படுகிறது. கருட சேவையை முன்னிட்டு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT