செய்திகள்

ஐயாறப்பா் கோயிலில் ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்

தினமணி

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அறம் வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் சரஸ்வதி பூஜை தினத்தன்று ஸ்ரீவித்யா மஹா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது.

இதைமுன்னிட்டு, கட பூஜை செய்யப்பட்டு 108 ஹோம திரவியங்கள் ஹோம குண்டத்தில் இட்டு ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்பு சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகங்களும், அதனைத் தொடா்ந்து, அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது.

வழிபாட்டில் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளா் ராம.சேயோன், துணை ஒருங்கிணைப்பாளா் சித்ரா சேயோன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT