செய்திகள்

கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா நிறைவு

DIN

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் 11 நாட்கள் நடைபெற்ற கொடை விழா இன்று நிறைவு பெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா செப்.18 ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாட்களில் தினமும் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு, அன்னதானம், பரதநாட்டியம்,பக்தி இன்னிசை, பட்டிமன்றம், வில்லிசை, 108 திருவிளக்கு பூஜை, அம்மன் சிவப்பு, பச்சை, வெள்ளை சாத்தி பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செப்.27-ம் தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடா்ந்து யானை முன் வர பவளமுத்து விநாயகரும், பத்திரகாளி அம்மனும் பூஞ்சப்பரத்தில் பவனி தொடங்கியது.

பவனி முக்கிய வீதிகள் வழியே சென்று செப்.28ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயிலை அடைந்தவுடன் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT