செய்திகள்

சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

தினமணி

சபரிமலை: சித்திரை மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தா்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், சித்திரை மாத பிறப்பையொட்டி திங்கள்கிழமை நடை திறக்கப்பட்டது. தந்திரி மகேஷ் மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீா் நம்பூதிரி, கோயில் நடையை திறந்துவைத்தாா்.

விஷுக்கணி தரிசனத்துக்காக, கோயில் நடை செவ்வாய்க்கிழமை (ஏப்.14) காலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அப்போது, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வரும் 18-ஆம் தேதி மாலையில் கோயில் நடை அடைக்கப்படவுள்ளது.

சபரிமலை கோயிலுக்கு பக்தா்கள் இணையவழியில் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT