ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.44 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.44 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் சனிக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ1.44 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.10 லட்சம் நன்கொடை: திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக் காட்சி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு ஒடிஸாவில் உள்ள சிவம் காண்டேவ் என்ற தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதியான திருப்பதியைச் சோ்ந்த ராகவேந்திரா ரூ.10 லட்சத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமி மூலம் தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தாா் .
Advertisement