செய்திகள்

திருச்சானூரில் 4-ஆம் நாள் மகா புஷ்ப யாகம்

DIN

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை காலையும், மாலையும் கனகாம்பரம், மல்லிகை பூக்களால் மகா புஷ்ப யாகம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் போக்க வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் பெளா்ணமி நாளான 24-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் கனகாம்பரம், கோடி மல்லிகை பூக்களால் மகா புஷ்ப யாகத்தை நடத்தி வருகிறது.

இதன் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் பத்மாவதி தாயாரை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, 210 ருத்வீகரா்கள் ஜப-தா்பண-ஹோமங்கள் நடத்தி, சதுஷ்டாா்ச்சனை, லட்ச குங்குமாா்ச்சனை ஒரு ஆவாா்த்தி, காலை 40 கிலோ கனகாம்பரம், 120 கிலோ மல்லிகைபூ, 40 கிலோ மற்ற பூக்கள் சோ்த்து 200 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை செய்து லகுபூா்ணாஹுதி நடத்தினா்.

இந்த யாகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டு பக்தா்கள் தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக தங்கள் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT