முகப்பு
செய்திகள்

சபரிமலையில் தெரிந்தது மகரஜோதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக இன்று மாலை 6.45 மணியளவில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

மாலை 6.45 மணியளவில் பொன்னம்பலமேட்டில் பிரசித்தி பெற்ற மகரஜோதி தெரிந்தது. சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களிலிருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஜோதியின் வடிவில் ஐயப்பன் காட்சியளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.