செய்திகள்

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்கும் மக்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காமல் கூட்டம் நிரம்பி வழிவதால், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காமல் கூட்டம் நிரம்பி வழிவதால், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த செப்.27 தொடங்கி அக்.5-ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், நேற்று சுவாமி தரிசனத்திற்கு 36 மணி நேரம் ஆன நிலையில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 6 மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பியுள்ளதால், இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று வருகின்றனர். 

சுவாமி தரிசனத்திற்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி உள்ளிட்ட அனைத்தும் வசதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT