செய்திகள்

சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?

இந்தாண்டின் பகுதி நேர சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழ உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிரகணத்தைக் காணலாம். 

தினமணி


இந்தாண்டின் பகுதி நேர சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழ உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிரகணத்தைக் காணலாம். 

ஜோதிட ரீதியாக

ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் - சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரியன் சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் போது அமாவாசையாகும். அதேபோல் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் அதாவது 180 டிகிரியில் இருப்பது பௌர்ணமியாகும்.

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தை ஆசியா, ரஷியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆர்டிக், அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணத்தைக் காண முடியும். 

நிகழும் சோபக்ருத் வருஷம் ஐப்பசி மாதம் 11ம் தேதி (28.10.2023) சனிக்கிழமை பௌர்ணமி திதி அஸ்வினி நட்சத்திரத்தில் இரவு மணி 01:05க்கு ஆரம்பித்து இரவு மணி 02:23க்கு முடிவடைகிறது. 

உணவு எடுத்துக்கொள்பவர்கள் மாலை 6.00 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்துகொள்ளலாம். 

தானம் செய்ய வேண்டிய பொருள்கள்

அரிசி - உளுந்து - தேங்காய் - வெற்றிலை பாக்கு பழம் - தக்ஷணை

கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியில் வருவைத் தவிர்க்கலாம். உணவு பதார்த்தங்கள் அனைத்திலும் தர்ப்பை புல் போட்டு வைக்கலாம்.

குறிப்பு: ராகு க்ரஸ்தமான இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே பரிகாரம் சாந்தி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT