வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!
வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் தேரோட்டம் இன்று (மே 19) நடைபெற்றது.
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை, யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு 'அரோஹரா' முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Advertisement
Advertisement
மேலும், வடபழனி முழுவதும் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.