செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது .
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் பெரிய மலையை குடைந்து ஒரே கல்லில் உருவான பாடலாத்ரி பெருமாள் சிவபெருமானை போன்று நெற்றிக்கண்ணை கொண்டு முக்கண்ணோடு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மே 13 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட வைகாசிப் பெருவிழாவின் ஏழாம் நாள் உற்சவமாக திருத்தேர் உற்சவம் தேர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேரோட்டத்தை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. உற்சவ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தயாராக நின்ற தேரில் அமர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
தேர் புறப்பாடு நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்த போது பக்தர்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தேரோட்டம் நடைபெற்ற நான்கு மாட வீதிகளிலும் ஆன்மீக அன்பர்கள் அன்னதானம், குளிர்பானம் தண்ணீர் என வழங்கினர்.
தேர் திருவிழாவை காண செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் திருவிழாவை கண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோவில் பணியாளர்கள், கோயில் பட்டாச்சாரியார்கள், உற்சவர் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.