ஆயிரம் கிலோ அன்னத்தால் தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது, நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம் வருகின்ற பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இதேபோல் ஐப்பசி பௌர்ணமி ஆன இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் - 500 கிலோ காய்கறிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று இரவு அன்னாபிஷேகம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகவும் - பின்னர் நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்காக இந்த பிரசாதம் நீரில் கரைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.