கபர்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு 
செய்திகள்

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு: திரளானோர் பங்கேற்பு!

2000 ஆண்டுகள் பழமையான திருவலஞ்சுழி கோயிலில் குடமுழுக்கு..

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது.

மூவரால் தேவார பாடல் பதிகம் பாடப்பட்ட தலம். இத்தலம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் இணை கோயிலாகவும் உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்பான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகமும் காவல்துறையும் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் பொறுப்பு!

ஓணம் வந்தள்ளோ... தீப்தி சதி!

வெற்றியுடன் தொடங்குமா இளம் ஸ்பெயின் அணி? யமால், பெட்ரி மீது அதீத எதிர்பார்ப்பு!

அழகு ராட்சசி... யோகலட்சுமி!

SCROLL FOR NEXT