ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

DIN

சென்னை புழல்  ஏரியில் இருந்து  பூமிக்கடியில் குழாய் பதித்து கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தியது. இப்போது அந்நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். சிலர் நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பூமிக்கடியில் குடிநீர் குழாய் பதித்துள்ள நிலத்தின் மேல் கட்டடங்கள் கட்டும் போது பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைகின்றன. இதனால் பல இடங்களில் குடிநீர் வீணாகின்றது.  உடைந்த குழாய்கள் மீது கட்டடங்கள் உள்ளதால் குடிநீர் குழாய்களை சரி செய்ய முடியாத நிலை உள்ளது . எனவே சென்னை குடிநீர் வாரிய ஆணையர் ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்து அரசுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
எஸ்.கனகராஜ்,  சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவைப் பயிரில் உயா் விளைச்சலுக்கான உழவியல் நுட்பங்கள்

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT