கவிதைமணி

மழை நீர் போல: ச.பவித்ரா

கவிதைமணி
இன்பம் எங்கும் நிரம்பிக் கிடக்கிறதுஇனிமை எதிலும் பொங்கி வழிகிறது...!மழையாய் இன்பம் கொட்டும்போதும்மாயக் குடையை விரித்து வைத்துவாழ்வே மாயம் என்று புலம்பிவறட்சி நோக்கி விரைவது ஏன்?மனிதா!உன்னைச் சுற்றிப் பார்சுற்றம் தந்திடும் அன்பு மழைநட்பின் அழகிய உரிமை மழைபுரியும் உனக்கு இவையெல்லாம்இறைவன் அளித்த வரத்தின் மழை...!இயற்கைக் காட்சி தினமும் பார்உலகின் ரகசியம் தெரிந்துவிடும்மனதிடம் அனுதினம் பேசிப்பார்வாழ்க்கை எதுவென புரிந்துவிடும்பிடித்தவற்றைச் செய்துப்பார்உலகம் உனக்குச் சொர்க்கமாகும்...!பாசத்தோடு பேசிப்பார்அகிலம் உனக்கு அடிமையாகும்...!குழந்தையோடு பேசிப்பார்புத்தம் புதிதாய் பிறப்பெடுப்பாய்!கற்பனைச் சிறகை விரித்துப்பார்புதிய வானம் நீ படைப்பாய்!எதுவும் இங்கே நிலையில்லைமழைநீர் போன்ற வாழ்க்கையிது....மண்ணை நாமும் தொடுமுன்னேமரணம் வாசல் வருமுன்னேவசந்த நினைவுகள் சேர்த்திடுவோம் -வாழ்வைக்காவியமாக்கிச் சென்றிடுவோம்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT