கவிதைமணி

இன்றைய தாலாட்டு: ச . பிரசன்னா 

கவிதைமணி

திருவாலி
கிராமத்து  திண்ணையில்
ராஜ ராகங்கள் கேட்டபடி
தென்னை மர காற்று
குளிரை வாரி வாரி வீசியபடி
வயலோரம் அள்ளி அள்ளி
அலையடிக்கும்  நாரை,
கொக்கு, கெண்டை மீனை
பார்த்தபடி
அம்மா எடுத்து வரும்
புளியோதரை , தயிர் சாதத்தை
சாப்பிட்ட காலம்
வயல் வரப்பில்
படுத்து உறங்கியபடி
இருந்த
இன்ப காலத்தை, இழந்த காலத்தை
கனவில்
ஆழ்ந்தபடி
தீப்பெட்டி அளவு  அபார்ட்மெண்ட்ஸில்
ஒடுங்கியிருக்கையில்
எங்கிருந்தோ கேட்கும் ராஜ ராகம்
இன்றைய தாலாட்டு !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT