கவிதைமணி

விடுதலை: லட்சுமிபாலா

கவிதைமணி
விடுதலை
எது விடுதலை?
எதிலிருந்து விடுதலை?
எப்போது விடுதலை?
வாழ்க்கையே
விடுதலை நோக்கிய பயணமோ?
பள்ளிப்பருவத்தில்  
கல்லூரிப்பருவம் விடுதலை 
என நினைக்கிறது
கல்லூரிப்பருவமோ ஊதியம் வாங்குவதே
சுதந்திரம் என ஏங்குகிறது
அலுவலகம் சென்ற பின்னே புரிகிறது இது ஓரு
மீளாச்சிறை என்று
கல்யாணவாழ்க்கையில்
இறக்கை கட்டி பறக்கலாம் என
நினைத்தால் அதுதரும் 
சுமைகள் பாதாளச்சிறையில்
தள்ளிவிடும் போல் உள்ளது
பணிஓய்வுக்குப்பின் ஆகா அனுபவிக்கலாம்
சுதந்திரகாற்றை என்றால்
அடுக்அடுக்காய் கடமைகள் சவால் விட்டு நிற்கின்றன
கிடைக்குமோ விடுதலை இந்த உயிரும்
உடலும் பிரிந்த பின்னால்
ஆனால் நான்றியேன் என் விடுதலையை
பிறர் அறிவாரோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT