கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: பொன். குமார்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
ஆனந்தமாக வாழ்ந்தவர்கள்
மக்கள்.

கிணறு வெட்டியும்
குளம் அமைத்தும்
குதித்து குளித்து
கொண்டாடியவர்கள்
மக்கள்.

ஆறுகளை
அழித்து விட்டார்கள்.
நதிகளை
நாசப்படுத்தி விட்டார்கள்.
கிணறுகளைக்
கொன்று விட்டார்கள்.
குளங்களைக் 
காணாமல் செய்து விட்டார்கள்.
மிச்சம் இருக்கும் நீரையும்
மாற்றானுக்கு விற்று விட்டது
அரசு.

இன்று
குளிக்கவும் நீரில்லை.
குடிக்கவும் வழியில்லை.
ஆறோடும் நீரோடும்
வாழ்ந்தவர்கள்
கண்ணீரோடும் வியர்வையோடும்
வாழ்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT