கவிதைமணி

குழந்தையின் குரல்: பொன் . குமார்

கவிதைமணி

குழந்தையின் குரல்
கேளாதவரே
குழலினிது என்பர்.

மனிதனின்
கவலைகளைத் தீர்க்கும்
குழந்தையின்
சிரிப்பு குரல்.

மனிதர்கள்
கேட்க க் கூடாத து
குழந்தைகளின்
அழுகுரல்.

பெற்ற தாயாலே
பிரித்து பார்க்க முடியும்
குழந்தைகளின் குரல் வழியான
கோரிக்கைகள்.

குழந்தையுடையது என்றாலும்
ஒவ்வொரு குழந்தையிடமும்
ஒவ்வொரு விதமான குரல்.

கபடம் இல்லாத து
குழந்தையின் குரல்.
கள்ளம் இல்லாத து
குழந்தையின் குரல்.

அதிக பட்சம்
ஒரு குடும்பத்துடனே
முடிந்து விடுகின்றன
குழந்தையின் குரல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT