கவிதைமணி

 பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கோவை புதியவன்

கவிதைமணி

மேல்சட்டையில்லாமல்
அரை டவுசரில்
காடு, மேடு, களத்துமேடு என
கொட்டும் மழையில்
தாத்தாவின் பிஞ்சு மனம்
நுங்கு வண்டி உருட்டியபடி

அம்மா சொன்ன வேலைக்காக
கடைத்தெருவிற்கு செல்ல
கனத்த மழை முத்தமிட்ட
செம்மண் சிற்றாறுகளிடையே
அப்பாவின் பிஞ்சு மனம்
சைக்கிள் டயர் உருட்டியபடி

ஜன்னல் கம்பியில் முத்தமிட்ட
மழைத்துளி கண்ணில் பட
நனைவதற்கு அனுமதியின்றி
வாசலில் நின்ற தண்ணீரில்
என் பிஞ்சு மனம்
காகித கப்பல் விட்டபடி

கம்ப்யூட்டர், லேப்டாப்
செல்போன், தொலைக்காட்சி
மூளைச்சாவு கிருமிகளோடு
என் வாரிசுகளின் பிஞ்சுமனம்
செல்லா காசாய்
செல்ல மழை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT